3 செப்டம்பர், 2011

குரல் புதிது! பணி புதிது!

புதிய தலைமுறை இதழுக்கு நான் பேட்டிக் கண்டு எழுதிய முதல் கட்டுரை
 குரல் புதிது ! பணி புதிது 


சூரியன் உறங்கச் செல்லும் மாலை நேரம்,பல பறவைகளின் கூச்சல்களையும் சுமந்து நிற்கும் திருச்சி உறையூர் பஞ்சவர்னேசுவரர் ஆலயம் பார்பதற்க்கு பழமையான கோவில், அங்கு ஒரு இனிமையான குரல் நம்மை பின் தொடர்கிறது,அதை நாமும் பின் தொடர்ந்து சென்றால் கருவறையின் முன்பு அந்த இனிமையான குரலுக்கு ஓர் 28 வயது மதிப்புள்ள இளம் துறவி போல் இருக்கும் பெண்மணி பாடிக்கொண்டு இருக்கிறார். கடவுள் எவ்வளவு அழகு, என்ன நிறம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நம் கண்முன்னே தெரிவது கருமையான கற்களாகத்தான், பாடிக்கொண்டிருந்த பெண்மணியும் கடவுளோடு ஒத்து போகிறார் நிறத்தில். அவர் தான் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி. தலித் சமூகத்தில் பிறந்த அங்கையற்கண்ணி முதல் ஓதுவராக பொறுப்பேற்று தமிழக இந்து சமய வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். உறையூரில் இனி எப்போது கல்வெட்டு அமைக்கப்பட்டாலும் அதில் நிச்சயமாய் அங்கையற்கண்ணியின் பெயரும் இடம் பெறும்.

தமிழ் மறவர்கள் பாடிய திருமுறை, தேவாரம் எல்லாம் அங்கையற்கண்ணி நாவில் கலைவாணி போல் வெளியே வந்து துள்ளி விளையாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர் பாடும் தேவாரப் பாடலில் மெய் மறந்து கடவுளை தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கோவில் கருவறை முன்பு அகல்விளக்கு வெளிச்சத்தில் அங்கையற்கண்ணியின் குரல் கோவில் முழுவதும் ஒலிக்கிறது. அவரிடம் கேட்ட போது ;

' எனக்கு சொந்த ஊர் திருச்சியில் உள்ள செம்பட்டு தான். அப்பாவுக்கு நைட் வாட்ச்மேன் வேலை. நாங்க மொத்தம் ஆறு பேர். அக்கா, இரண்டு அண்ணன், தம்பி, தங்கைன்னு பெரிய குடும்பம். தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தினசரி சாயந்திர வேளைகளில் முதியவர் ஒருவர் பக்தி பாடல்களை ராகமாக பாடிக்கொண்டு இருப்பார். அவர் பாடுறதை கேட்டு நானும் பக்கத்தில் சென்று உட்கார்ந்துக்கொண்டு பாடி பல பக்தி பாடல்களை ராகமாய் பாடக் கற்றுக்கொண்டேன். அப்பொழுது எனக்கு ஆறேழு வயசு இருக்கும். கனவிலும் நினைத்து பார்க்கவில்லை பின்னாளில் நானும் ஒரு கோவிலில் நின்று படுவேன் என்று. குடும்ப கஷ்டத்துலயும் ரொம்ப கடினமா படிச்சி ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். காலேஜ் படிக்க ஆசைதான் ஆனா குடும்பம் வறுமைல இருந்ததால் மேல படிக்க முடியல. திருச்சியில் 1996 -வருடம் அரசு இசைப்பள்ளி ஆரம்பித்தார்கள். அங்கு இலவசமா தவில், பரதம், தேவாரம், நாதஸ்வரம் சொல்லி கொடுத்தாங்க.இசை மேல் எனக்கு ஆர்வம் இருந்ததால சேர்ந்தேன்.

திருமுறை வகுப்பு மூன்று வருட படிப்பு. பஞ்சபுராணம் என்று  சொல்லப்படும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் போன்றவைகளில் இருந்து முக்கிய பாக்கள் பாடங்களாக அமைய பெற்றிருந்தது.

2004 - ல் சிறப்புத் தேர்ச்சி பெற்று இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பெண்களை இதுவரைக்கும் ஓதுவார் பணிக்கு நியமித்ததில்லை, ஆனால் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நானும் ஓதுவார் பணிக்கு விண்ணபிச்சேன். என்னோட அதிர்ஷ்டம் 2006 - ம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாராகப் பணியமர்தப்பட்டேன். நான்கு வருடங்களாக இங்கு பணியில் உள்ளேன். இதுவரைக்கும் மாதம் 1500 ரூபாய் தான் சம்பளமா தராங்க. எனக்கு நிறைய பொருளாதார கஷ்டங்கள் இருக்கு என் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று வருத்தமுடன் சொல்லும் அங்கையற்கண்ணி ஆர்வமுள்ளவர்களுக்கு தேவாரமும் சொல்லித் தருகிறார்."

"மேல் வர்க்கம் தீண்டாத மக்கள் குடியில் பிறந்த அங்கையற்கண்ணியின் குடும்பம் தான் பெரியது என்றால், அவர் வாயிலிருந்து வரும் தேவார இசையும் பெரியது தான். கோவிலுக்கு பாடச் செல்லும் முதல் நாளே வானத்தில் உள்ள நூறு கோடி தேவர்களும் மலர் தூவி அனுப்பி வைத்தார்கள் போலும் இவர் தேவாரம் பாடுவதற்காக, ஏனென்றால் கடவுள் தான் மாற்றத்திற்கு அடிப்படையானவன். தாழ்ந்த குடியில் பிறந்தவர்க்கு தேவாரம் கற்கும் ஆர்வத்தையும், இந்து சமுதாய சடங்குகளை தகர்க்கும் துணிச்சலும் அங்கையற்கண்ணியிடம் இருந்து இருக்கும் போல் அதனால் தான் கடவுளும் ஆசிர்வதித்துள்ளர்.

அங்கையற்கண்ணியின் முந்தைய தலைமுறை யாருமே கோயில் சென்று பாடியதில்லை. அதை இந்து சமுதாயமும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்த 21 - ம் நூற்றாண்டில் எல்லாமே மாறி வரும்போது, இது இந்து சமுதாயத்தின் மிகப்பெரிய மாற்றம். பெண்களுக்கு முன்னோடியாக இருக்கும் அங்கையற்கண்ணி இந்து சமுதாயத்தின் உலக அதிசயம் தான். இவர் முதல் மனுஷி என்பதால் நாமும் மலர் தூவி வரவேற்போம். இவரது தேவார இசையை கேட்க விரும்பும் தமிழக மக்களே, திருச்சி உறையூருக்கு வாருங்கள். நீங்களும் சாமிக்கு ஓதி விட்டு செல்லுங்கள்.

அன்புடன்
வினி சர்பனா


16 கருத்துகள்:

  1. இவர் முதல் மனுஷி என்பதால் நாமும் மலர் தூவி வரவேற்போம்.// நானும் மலர் தூவுகிறேன்,

    உங்களுடைய வலைப்பூவை தமிழ்மணம்,தமிழ்10,இண்ட்லி, தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைக்கவும், நிறைய பார்வையாளர்களை கவரவும், மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்... அப்படியே முடிந்தால் என் வலைப்பூவையும் பார்வையிடுங்கள்,
    http://vigneshms.blogspot.com

    அப்படியே பின்னூட்ட பெட்டியில் இருக்கும் வேர்ட் வெரிபிகேஷனையும் நீக்கிவிடுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. அங்கயற்கண்ணி என்ன அருமையான பெயர், அங்கயற்கண்ணியின் குரல் ஒலிப்பது போல், தங்கள் குரலும் (எழுத்தும்) ஒலிக்க என் வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்

    பதிலளிநீக்கு
  3. உங்களின் எழுத்துக்கள் எனக்கு நல்லா பிடிக்கும் வினி.. அது ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் உங்கள் எழுத்துக்கள் என்றும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான யோசனை ஷர்பனா அவர்களே... வலைப்பூவில் உங்கள் கருத்துகளை வெளியிடுவது இன்னும் எளியது.. இன்னும் வலியது... -கோகுல் ராஜ்

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வினி, மெயில் சப்ஸ்கிரைப் செய்து விட்டேன். பொறுப்பற்ற சமூகத்தின் மீதான பொறுப்புள்ள கோபத்தை எதிர்பார்கிறேன் பதிவுகளில். தொடருங்கள் தொடர்கிறோம். தோழமையுடன்

    பதிலளிநீக்கு
  7. வினி, கட்டுரை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. உண்மையில் மிகச்சிறந்த மாற்றம்... இதையே இச்சமூகம் (இளைய சமூகம்) விரும்புகிறது.... வாழ்த்துக்கள் தோழி...

    பதிலளிநீக்கு
  9. அங்கையற்கண்ணி வாழ்கையில் மென்மேலும் வளர இறைவனை வேண்டிகொள்கிறேன். வாழ்த்துக்கள் சர்பனா. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. ஏற்கனவே பிரபல முகம் என்பதால் எளிதாக பல பேரை உங்கள் பதிவுகள் எளிதாக சென்றடையும்....கவனமாக எழுத வாழ்த்துக்கள்.அதோடு Heart Rider சொன்னதை செய்யவும் வழிமொழிகிறேன்......

    அங்கையற்கண்ணி அறியாத விஷயம்....அதிலும் தலித் என்பது வரலாற்று சிறப்பு.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. எந்த ஆண்டு யாருடைய ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
    ஓதுவார் அங்கையர்க்கண்ணி அவர்களுக்கு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு