18 பிப்ரவரி, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - எப்பொழுதும் உன் கற்பனையே


"முப்பொழுதும் உன் கற்பனைகள்" தலைப்புக்கேற்ற மாதிரியே படமும் கவிதையா இருக்கு.இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு,எப்பொழுதும் உன் கற்பனையேன்னு காதலிக்கும் ஆண்கள் தங்கள் காதலிகளின் கற்பனைகளில் திரிவார்கள் என்பது மட்டும் நிஜம்.
நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்க்க காரணம்,"படத்தோட அழகான தலைப்பு,ஒருமுறைப் பாடல் (என்னோட ஃபேவரைட் பாட்டு ),மைனா படத்தில் கிடைத்த புகழை விட,முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் என்னை மேலும் உயரத்திற்கு கொண்டுப் போகும் என்று கூறிய அமலாபாலின் பில்டப்.இந்த 3 காரணங்களாலேயே படம் பார்க்க ஆவலா இருந்தேன்.


அமலாபால் கொடுத்த பில்டப்புக்கு,நல்லா நடிச்சி இருப்பாங்கன்னு பார்த்தேன்.மைனா இயக்கிய பிரபு சாலமனை தவிர வேறு எந்த இயக்குனரும் அமலாவிடம் இருந்து நடிப்பை வெளிக்கொணரவில்லை.மற்றவர்கள் வெறும் கவர்ச்சியை மட்டும் தான் வெளிக்கொண்டு வந்திருக்காங்க:)அமலாவோட  நடிப்பு யதார்த்தமா இல்லாம செயற்கை தனமாவே இருக்கு.( முகபாவனைகளை எப்படி வெளிப்படுத்துறதுன்னு வடிவேலுவை பயிற்சி கொடுக்க சொன்னாத்தான் சரிப்பட்டு வருவாங்கன்னு நினைக்குறேன்:) ஒருமுறை பாடலுக்கு அமலாபால் ஒரு டான்ஸ் ஸ்டேப் போடுவாங்கப் பாருங்க ராமராஜனே அந்த இடத்துல தோற்றுப் போய்டுவாரு:)))அமலா கதையோட ஒட்டவே இல்ல. 

ஐடி துறையில் வேலைப்பார்க்கும் அதர்வா தன்னுடன் புராஜெக்ட் செய்ய வந்த தோழி அமலாபால் மீது கண்மூடித்தனமாக காதல் கொள்கிறார்.இதுத் தெரியாத அமலாவோ, புராஜெக்ட் முடிந்தவுடன் அமெரிக்கா சென்றுவிட்டு வேறொருவருடன் நிச்சயதார்த்தமும் முடிந்து திருமணம் நடக்க 15 நாட்கள் இருக்கும் தருவாயில் அலுவலக வேலையாக சென்னை வருகிறார்.தன்னையே பைத்தியமாக காதலிக்கும் அதர்வாவை சந்தித்தாரா,இல்லையா,அவரது காதல் தெரிந்ததா,சேர்ந்தார்களா என்பதை த்ரில்லர் + ட்விஸ்ட்களோடு
சுவாரசியமா சொல்வது தான் முப்பொழுதும் உன் கற்பனைகள்.முதல் பாதியில் படத்தின் காட்சியமைப்புக்களை புரியாதது போல் அமைத்து,பின்பாதியில் அனைத்திற்கும் விடைக் கொடுத்திருப்பதில் இயக்குரனரின் சாமர்த்தியம் புரிகிறது. 


ஐடி துறையில் நடக்கும் உண்மையான சில அவங்களை பதிவு செய்ததற்காகவும்,நடுநடுவே ட்விஸ்ட்கள் வைத்து படத்தில் விறுவிறுப்பு கூட்டியதற்க்கும் இயக்குனர் எல்ரெட் குமாரை பாராட்டலாம்.எல்ரெட் குமாருக்கு இது முதல் படமாம்.(நம்பமுடியவில்லை என்னால் நம்பமுடியவில்லை:).அத்தனை முதிர்ச்சி.இயக்குனராக இருந்துக்கொண்டு படத்தையும் இவரே தயாரித்திருக்கிறார்.வாழ்த்துக்கள்!!!(ஆனால்,பார்த்திபனின் குடைக்குள் மழை படம் லைட்டா எட்டிப் பார்க்குது  சார்:)) 

படத்தின் நிஜ ஹீரோக்கள் காஸ்டியூம் டிசைனர்,அதர்வாவின் அம்மாவாக நடித்த அனுபமா,இசையமைப்பாளர் ஜி,வி பிரகாஷ் தான்.கதை ஐடி துறை என்பதால் படத்திலும்,பாடல்களிலும் அதர்வா,அமலாபாலின் காஸ்டியூம்கள் படத்தோடு ஒன்றி நம்மை ரசிக்க வைக்கிறது.அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா முகத்தில் ஓராயிரம் பாவனைகள்.தன் கணவர் இறந்தவுடன்,மற்ற ஆண்களின் கண்களில் இருந்து தப்புவதற்காக மொட்டையடித்து மூளியாக்கி கொள்வதாகட்டும்,மிரட்டி வட்டி வசூலிப்பதிலும்,தன் மகனுக்காக உருகுவதாகட்டும் நம்மையும் அவருடன் சேர்ந்து உருக வைத்துள்ளார்.இந்தப் படத்தில் நம் மனதில்  பதிவது அனுபமா மட்டுமே.சந்தானம் தன்னுடைய நக்கலான யதார்த்தமான
காமெடிகளால் நம்மை வயிறு குலுங்க ரசிக்க வைத்து சிரிக்க வைக்கிறார்.சந்தானம் அமலாபாலை கடத்தப்போகும் காட்சிகள் செம:)
 
ஜீவி பிரகாஷ் பின்னணி இசையிலும், பாடல்களிலும் மிரட்டியிருக்காரு.ஒருமுறை,கண்கள் நீயே பாடல்கள் மனதில் நிற்கும் ரகம்.ஒருமுறை பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது:)கண்கள் நீயே பாடல் நம் அம்மாக்களை நினைவுப்படுத்தி உருக வைக்கிறது."அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை,இன்னிலை சொல்லுதே, என் காதலின் வானிலை" என்று வரிகள் அமைத்த பாடலாசிரியர் தாமரையின் பாடல் வரிகளை  பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை.கிரேட்!!!!
 
பாணா காத்தாடியை விட அதர்வாவோட நடிப்பு இதுல கம்மி தான்.ஆனா,நல்ல காதலனா நடிச்சிருக்காரு.அமலாபாலை பைத்தியமாவே காதலிப்பதாகட்டும்,பாடல்களின் டான்ஸ்,சண்டைக் காட்சிகள் அனைத்திலும் செம.ஆனால்,அதர்வாவின் குரலைக் கேக்கும்போது ஸ்பீக்கரை முழுங்கிட்டு பேசுறாரோன்னு தோணுது:)
 
அதர்வாவின் ஆழமான காதல்,ட்விஸ்ட்கள்,விறுவிறுப்பான கதை ஆகியவை படத்துக்கு ப்ளஸ்.அடிக்கடி வரும் பாடல் காட்சிகள்,சில இடங்களில் லாஜிக்கே இல்லாத காட்சியமைப்புகள்,அமலாபாலின் ஒட்டாத நடிப்பு இவையெல்லாம் படத்தின் மைனஸ்கள்.
 
இத்தனை மைனஸ்கள் இருந்தாலும் படம் முடியும்போது நம் மனம் பட்டாம் பூச்சியாய் பறந்து சந்தோசத்தில் சிறகடிப்பதை யாராலும் மறுக்க முடியாது.ஒரு அழகான காதல் கவிதையை ஃபோர் அடிக்காமல் 2 .30 மணி நேரம் சுவாரசியமாக நம்மை படிக்க வைத்த இயக்குனர் எல்ரெட் குமாருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!!!